மேலும் செய்திகள்
எஸ்.என்.எஸ். அகாடமி ஆண்டு விழா
13-Feb-2026
கோவை: கோயம்புத்துார் இன்ஸ்டிட்யூட் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி கல்லுாரியில், என்.எஸ்.கே., பேரிங்ஸ் நிறுவனத்தின் சி.எஸ்.ஆர். திட்டத்தின் கீழ், சிறப்பு திறன் மேம்பாட்டு மையம் திறக்கப்பட்டது. நீலகிரி ஆதிவாசி நல சங்கம் ஆதரவுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த மையத்தில், கிராமப்புற மாணவர்கள் பயன் பெறும் வகையில், தொழில்துறை பாதுகாப்பு, தரக்கட்டுப்பாடு மற்றும் உற்பத்தி நுட்பங்கள் தொடர்பான திறன் அடிப்படையிலான பயிற்சி வழங்கப் படவுள்ளது. துவக்க விழாவில் ஜப்பான், என்.எஸ்.கே., பேரிங்ஸ் தலைவர் டரோ நகாய், மூத்த தலைமை ஆலோசகர் தகாயுகி நாகன்சி, நீலகிரி ஆதிவாசி நல சங்க செயலாளர் அலுவாஸ், கல்லுாரியின் இயக்குனர் சின்னராஜூ, முதல்வர் மணிகண்டசுப்பிரமணியன்ஆகியோர் கலந்துகொண்டனர்.
13-Feb-2026