உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கல்லுாரி மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு நிகழ்ச்சி

கல்லுாரி மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு நிகழ்ச்சி

பொள்ளாச்சி:பொள்ளாச்சி கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், திறன் மேம்பாட்டு நிகழ்ச்சி நடந்தது.பூசாரிப்பட்டியிலுள்ள, பொள்ளாச்சி கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், வணிகவியல் மற்றும் வணிகம், கணினி பயன்பாட்டியல் துறைகளின் சார்பில், 'நிலையான வளர்ச்சி இலக்குகளின் கூட்டுறவின் பங்குகள்' என்ற தலைப்பில், மாணவர்களுக்கு வழிகாட்டும் திறன் மேம்பாட்டு நிகழ்ச்சி நடந்தது.கல்லுாரி தாளாளர் மகேந்திரன் தலைமை வகித்தார்.வணிகவியல் துறை ஒருங்கிணைப்பாளர் உதவிப்பேராசிரியர் பானுப்பிரியா வரவேற்றார்.ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின் உதவிப்பேராசிரியர் மகேஷ்கண்ணன் பேசினார். கல்லுாரி முதல்வர் கண்ணன், வணிகவியல் துறை முதன்மையர் சபரிநாதன் ஆகியோர் பேசினர். கணினி பயன்பாட்டியல் துறை உதவி பேராசிரியர் சங்கீதா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை