உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வாழைத்தார் வரத்து மந்தம்; செவ்வாழை கிலோ ரூ.65

வாழைத்தார் வரத்து மந்தம்; செவ்வாழை கிலோ ரூ.65

கிணத்துக்கடவு ; கிணத்துக்கடவு தினசரி மார்க்கெட்டில் வாழைத்தார் வரத்து சராசரியாகவும், விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.கிணத்துக்கடவு தினசரி மார்க்கெட்டில் தற்போது செவ்வாழை (ஒரு கிலோ) - 65 ரூபாய், நேந்திரன் - 35, ரஸ்தாளி - 45, பூவன் - 20, கதளி - 25, சாம்பிராணி வகை - 40 ரூபாய்க்கு விற்பனை ஆனது.சென்ற வாரத்தை விட தற்போது நேந்திரன் (கிலோ), ரஸ்தாளி மற்றும் சாம்பிராணி வகை வாழைத்தார் என ஐந்து ரூபாய் விலை அதிகரித்துள்ளது. மற்ற வகை வாழைத்தார் விலையில் மாற்றம் இல்லை.வியாபாரிகள் கூறியதாவது, 'மார்க்கெட்டில், வாழைத்தார் உள்ளூர் வரத்து மட்டுமே இருந்தது. வாழைத்தார் வரத்து மந்தமாக இருக்கும் நிலையில், இம்மாதம் இறுதி வரை விலையில் பெரிதாக மாற்றம் இருக்காது,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை