சாண எரிவாயு தொழில்நுட்ப பயிற்சி
கோவை; கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலையின், வேளாண் பொறியியல் மற்றும்ஆராய்ச்சி நிலையத்தில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பொறியியல் துறை செயல்படுகிறது. இங்கு, மத்திய அரசின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையின் நிதியுதவியோடு, சாண எரிவாயு மேம்பாடு மற்றும் பயிற்சி மையம் செயல்படுகிறது. இம்மையத்தின் வாயிலாக, பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 20 பயனாளர்களுக்கு, சாண எரிவாயு தொழில்நுட்ப பயிற்சி வழங்கப்படுகிறது.நான்கு நாள் பயிற்சியை, சாண எரிவாயு மேம்பாடு மற்றும் பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் துவக்கி வைத்தார்.பேராசிரியர்கள் மகேந்திரன், பழனிசெல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.