உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஸ்மார்ட் மீட்டர் திட்டம்; விவசாயிகள் எதிர்ப்பு

ஸ்மார்ட் மீட்டர் திட்டம்; விவசாயிகள் எதிர்ப்பு

- நமது நிருபர் -தமிழக அரசின் 'ஸ்மார்ட் மீட்டர்' பொருத்தும் திட்டத்திற்கு உழவர் உழைப்பாளர் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.பல்லடத்தில், இதன் மாநில தலைவர் செல்லமுத்து கூறியதாவது:கடந்த, 2018 முதல் விவசாய பம்ப்செட்களுக்கு, எவ்வளவு மின்சாரம் செலவாகிறது என்பதை அறிவதற்காக, மீட்டர் பொருத்தும் முயற்சியை தமிழக அரசு மேற்கொண்டது.இது இலவச மின்சாரம் பெற்று வரும் விவசாயிகளுக்கு, கட்டணம் நிர்ணயிப்பதற்கான முன்னேற்பாடு எனக் கருதி, விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்; திட்டம் கைவிடப்பட்டது.மீண்டும், 'ஸ்மார்ட் மீட்டர்' பெயரில், தமிழக அரசு விவசாயிகளை அச்சுறுத்தி வருகிறது. இதுவும், மின் கட்டணத்தை நிர்ணயிப்பதற்கான திட்டமாகவே கருதுகின்றனர். இலவச மின்சாரம் பெற்று வரும் வேளாண் மின் இணைப்புகளுக்கு, கட்டணம் நிர்ணயிக்கப்படாது என, தமிழக அரசு, விவசாயிகளுக்கு உறுதி அளிக்க வேண்டும்.வேளாண் மின் இணைப்புகளில் 'ஸ்மார்ட் மீட்டர்' பொருத்தினால் விவசாயிகளுக்கு எந்த வகையிலும் பாதிப்பு இருக்காது என உறுதி அளித்த பின்பே, ஸ்மார்ட் மீட்டர்களை பொருத்த அனுமதிப்போம்.இல்லையெனில், ஸ்மார்ட் மீட்டர் மாட்ட விவசாயிகள் யாரும் அனுமதிக்க மாட்டார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை