உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / எஸ்.என்.ஜி.சி. டிராபி கிரிக்கெட் போட்டி; எதிர்பார்ப்புக்கு மத்தியில் அரையிறுதி

எஸ்.என்.ஜி.சி. டிராபி கிரிக்கெட் போட்டி; எதிர்பார்ப்புக்கு மத்தியில் அரையிறுதி

கோவை,;ஸ்ரீ நாராயண குரு கல்லுாரியில், 17 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான, முதலாவது 'எஸ்.என்.ஜி.சி. டிராபி' கிரிக்கெட் போட்டி, நேற்று முன்தினம் துவங்கியது. டென்னிஸ் பந்து கொண்டு, 10 ஓவர்கள் நடத்தப்பட்ட இப்போட்டியில், 10க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன.முதல் போட்டியில் ரைசிங் ஸ்டார்ஸ் அணியும், வி.எப்.சி.சி., அணியும் மோதின. முதல் பேட்டிங் செய்த வி.எப்.சி.சி., அணி, 45 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய ரைசிங் ஸ்டார்ஸ் அணியினர் ஆறு விக்கெட் வித்தியாசத்தில், 46 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றனர்.கே.ஏ.டி., டர்ப் அணியும், ரைசிங் ஸ்டார்ஸ் அணியும் மோதின. முதல் பேட்டிங் செய்த ரைசிங் ஸ்டார்ஸ் அணி, 67 ரன்கள் எடுத்தது. கே.ஏ.டி. டர்ப் அணியினர், 68 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றனர். டி.டி., ஸ்போர்ட்ஸ் அணி, அமிர்தா அணியும் விளையாடின.அமிர்தா அணி, 55 ரன்கள் எடுக்க, டி.டி., ஸ்போர்ட்ஸ் அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில், 56 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. டி.டி.பி., ஸ்போர்ட்ஸ் அணியும், டி.டி., ஸ்போர்ட்ஸ் அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த டி.டி., அணி, 20 ரன்கள் எடுத்தது. டி.டி.பி., ஸ்போர்ட்ஸ் அணி, 21 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.பல்வேறு போட்டிகளை அடுத்து, இன்று நடக்கும் முதல் அரையிறுதியில், கே.ஏ.டி., டர்ப்ஸ் அணியும், டி.டி.பி., ஸ்போர்ட்ஸ் அணியும், இரண்டாம் அரையிறுதியில் கோவை பிரதர்ஸ் அணியும், ரோலக்ஸ் சி.சி., அணியும் மோதுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை