உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மலையில் பனிமூட்டம்; சுற்றுலா பயணியர் ரசிப்பு

மலையில் பனிமூட்டம்; சுற்றுலா பயணியர் ரசிப்பு

வால்பாறை; வால்பாறை மலைப்பகுதியில், படர்ந்த பனிமூட்டத்தை சுற்றுலா பயணியர் கண்டு ரசித்தனர்.வால்பாறையில் கடந்த சில நாட்களாக, கோடை மழை பரவலாக பெய்கிறது. கோடை மழையால் உள்ளூர் மக்களும், சுற்றுலா பயணியரும் மகிழ்ச்சியடைந்தனர்.மழை நீடிப்பதால், வால்பாறையில் தேயிலை செடிகள் துளிர்விட்டு உற்பத்தியும் அதிகரித்துள்ளது. வெயிலால் வனத்தில் கடும் வறட்சி நிலவிய நிலையில் கோடை மழையால் வனத்துறையினர் நிம்மதியடைந்துள்ளனர். அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக பெய்யும் கோடைமழையால், பி.ஏ.பி., பாசன விவசாயிகளும் மகிழ்ச்சியில் உள்ளனர். இதனிடையே வால்பாறையில் காலை, மாலை நேரங்களில் பனிமூட்டமும் நிலவுகிறது. குறிப்பாக, நல்லமுடி காட்சி முனை, அக்காமலை கிராஸ்ஹில்ஸ், வாட்டர்பால்ஸ் டைகர் வேலி பள்ளதாக்கு, கவர்க்கல், சக்தி - தலநார் உள்ளிட்ட பல்வேறு இடங்களில், காலை, மாலை நேரத்தில் நிலவும் கடும் பனிமூட்டத்தை சுற்றுலா பயணியர் வெகுவாக கண்டு ரசிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ