உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / எஸ்.என்.ஆர்., அறக்கட்டளை  புதிய நிர்வாகி பொறுப்பேற்பு  

எஸ்.என்.ஆர்., அறக்கட்டளை  புதிய நிர்வாகி பொறுப்பேற்பு  

கோவை : எஸ்.என்.ஆர்., சன்ஸ் அறக்கட்டளையின் கீழ், ராமகிருஷ்ணா மருத்துவனை, கல்லுாரிகள் என, 15 நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த அறக்கட்டளையின் புதிய நிர்வாக அறங்காவலராக சுந்தர், நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார்.இவர், இளநிலை பொருளாதாரம், முதுநிலை பிரிவில் எம்.பி.ஏ., பட்டம் பெற்றவர். மேலும், ஆர்.வி., வர்த்தக குழுமங்களின் மேலாண்மை இயக்குனர், எஸ்.என்.ஆர்., சன்ஸ் அறக்கட்டளையின் இணை நிர்வாக அறங்காவலர், எஸ்.ஆர்.எஸ்.ஐ.,கல்வி நிறுவனங்களின் அறங்காவலர், தொழில்முனைவோர் அமைப்புகளில் நிர்வாக பொறுப்புகள் என பல்வேறு முக்கிய பதவிகளை வகித்தவர்.இணை நிர்வாக அறங்காவலராக நரேந்திரன் பொறுப்பேற்றுக்கொண்டார். புதிய நிர்வாகிகளுக்குசக நிர்வாகிகள், அலுவலர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி