உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பெரியநாயக்கன்பாளையத்தில் மண் பரிசோதனை முகாம்

பெரியநாயக்கன்பாளையத்தில் மண் பரிசோதனை முகாம்

பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் சின்ன தடாகம், குருடம்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், சோமையம்பாளையம், கூடலூர் ஆகிய இடங்களில் மண் பரிசோதனை முகாம்கள் நடந்தன. இது குறித்து, பெரியநாயக்கன்பாளையம் வேளாண் துறையினர் கூறுகையில், 'விவசாயிகள் உயர் விளைச்சல் தரும் வீரிய ரகங்களை தொடர்ந்து சாகுபடி செய்வதாலும், ரசாயன உரங்களை தொடர்ந்து பயிர்களுக்கு இடுவதாலும், மண்ணின் தன்மை பெருமளவு பாதிக்கப்படுகிறது. பயிர் அறுவடைக்கு பின்னர் மண்ணில் உள்ள ஊட்டச்சத்துக்கள் குறைந்து விடுவதால், மண்ணின் தன்மைக்கு ஏற்ப பயிரினை தேர்வு செய்வதன் வாயிலாக, அதிக மகசூல் மற்றும் லாபம் பெறலாம். அதிக கார, அமில நிலை, உவர் நிலை இல்லாத, நல்ல வடிகால் வசதியுடன் இருக்கும் மண்ணே வளமான மண்ணாகும். மண்ணின் தன்மைக்கு ஏற்ப பயிரினை தேர்வு செய்து, அதிக மகசூல் பெற்றிடவும், மண் பரிசோதனை மிகவும் அவசியம். இதற்கு ஏதுவாக வேளாண்துறை சார்பில், பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் மண் பரிசோதனை நடந்தது.இதில், விவசாயிகள் தங்கள் நிலங்களில் உள்ள மண் மற்றும் நீர் மாதிரிகளை நேரடியாக வழங்கி உடனுக்குடன் முடிவுகளை விவசாயிகள் பெற்றுக் கொள்ள வழிவகை செய்யப்பட்டிருந்தது. முகாமில் விவசாயிகளுக்கான ஆலோசனைகளும் வழங்கப்பட்டன' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை