உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வறண்டது சோலையாறு அணை; கவலையில் பாசன விவசாயிகள்

வறண்டது சோலையாறு அணை; கவலையில் பாசன விவசாயிகள்

வால்பாறை; சோலையாறு அணை வறண்டு காணப்படுவதால், பி.ஏ.பி., பாசன விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.வால்பாறையில் ஆண்டு தோறும், பருவமழை பெய்யும் போது, பரம்பிக்குளம் - ஆழியாறு பாசனத்திட்டத்தின் முக்கிய அணைகளில் ஒன்றான சோலையாறு அணை நிரம்புகிறது. இதனையடுத்து, பரம்பிக்குளம் அணைக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.இந்நிலையில், கடந்த ஆண்டு பருவமழையின் போது, சோலையாறு, மேல்நீராறு, கீழ்நீராறு, காடம்பாறை, மேல் ஆழியாறு, பரம்பிக்குளம், ஆழியாறு ஆகிய அணைகள் நிரம்பின.இந்நிலையில், கடந்த ஐந்து மாதங்களாக, வால்பாறையில் மழைப்பொழிவு இல்லை. இடையிடையே கோடை மழை பெய்கிறது. இருப்பினும், அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து அதிகரிக்கவில்லை.இதனால், ஆறுகள் வறண்டுள்ளன. 160 அடி உயரமுள்ள சோலையாறு அணையின் நீர்மட்டம் நேற்று காலை, 1.98 அடியாக இருந்தது. சோலையாறு அணை வறண்ட நிலையில் காணப்படுவதால், மலைக்குன்றுகளுக்கு இடையே இருந்த நீர் வற்றி காணப்படுகிறது. இதனால், பி.ஏ.பி., பாசன விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை