உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சூரிய ஒளி மின்சாரம் விழிப்புணர்வு முகாம்

சூரிய ஒளி மின்சாரம் விழிப்புணர்வு முகாம்

வடவள்ளி: பிரதம மந்திரி சூரிய வீடு மின்சார திட்ட சிறப்பு முகாம், சூரிய ஒளி மின்சாரம் விழிப்புணர்வு மற்றும் சேவா சேது சிறப்பு முகாம், சீரநாயக்கன்பாளையத்தில் உள்ள மி.வா கோட்ட அலுவலகத்தில் நேற்று நடந்தது. மேற்பார்வை பொறியாளர் குமார் துவக்கி வைத்து, சூரிய ஒளி மின்சாரத்தினால் பொதுமக்களுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்தும், சூரிய ஒளி மின்சார உற்பத்தியில் அவசியம் குறித்தும், பிரதம மந்திரி சூரிய வீடு மின்சார திட்டத்தின் கீழ், வீடுகளில் சோலார் பேனல் அமைக்க மத்திய, மாநில அரசுகள் சார்பில் வழங்கப்படும் மானியங்கள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார். சோலார் பேனல் அமைக்கும் நிறுவனங்களும் இம்முகாமில் கலந்து கொண்டு, விருப்பம் இருந்த பயனாளிகளுக்கு, உடனடியாக மானியத்தில் சோலார் பேனல் அமைப்பதற்கு பதிவு செய்து கொண்டனர். கோட்ட செயற்பொறியாளர் (பொ) மகாலட்சுமி, உதவி செயற்பொறியாளர்கள் சுப்பிரமணியன், வேல்முருகன், சதீஷ் பாபு கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி