மேலும் செய்திகள்
ஸ்ரீ ஈஸ்வர் கல்லுாரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
27-Sep-2024
கோவை : ஸ்ரீ ஈஸ்வர் பொறியியல் கல்லுாரி சார்பில், சூரிய சக்தியில் இயங்கும் பால் கறக்கும் இயந்திரம் தயாரித்து, கோதவாடி கிராம மக்களுக்கு வழங்கப்பட்டது. மத்திய அரசின், 'உன்னத் பாரத் அபியான்' திட்டத்தின் ஒரு பிரிவான, 'தொழில்நுட்ப தனிப்பயனாக்குதல் திட்டத்தின் கீழ் இயந்திரம் வழங்கப்பட்டது. கல்லுாரி தலைவர் மோகன்ராம் வழங்கினார்.இதுசார்ந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், கல்லுாரி தலைவர் மோகன்ராம் மற்றும் கோதவாடி கிராமப் பஞ்சாயத்து தலைவர் ரத்தினசாமி கையெழுத்திட்டனர்.ஸ்ரீ ஈஸ்வர் கல்லுாரியின் ஆராய்ச்சித்துறை மற்றும் சமூக நலத்துறை டீன் கருப்புசாமி, தொழில்துறை நல்லுறவு டீன் கண்ணன் நரசிம்மன், பேராசிரியர்கள், கோதவாடி கிராம மக்கள், மாணவர்கள் பங்கேற்றனர். திட்டத்தின் கீழ், கொண்டம்பட்டி, கோதவாடி, குருநல்லிபாளையம், மன்றாம்பாளையம் மற்றும் வடசித்துார் ஆகிய ஐந்து கிராமங்களில் சூரிய ஒளி மின்சாரம், இயற்கை விவசாயம், மற்றும் அரசுப் பள்ளிகள் சீரமைப்பு ஆகிய பணிகள், கல்லுாரி சார்பில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக மேற்கொள்ளப்படுகின்றன.
27-Sep-2024