உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சிவாலயங்களில் சோமவார சங்காபிேஷகம்

சிவாலயங்களில் சோமவார சங்காபிேஷகம்

சோமவார விரதம் ஆண்டு முழுவதும் ஒவ்வொரு திங்கட் கிழமைகளிலும் கடைபிடிக்கப்படுகிறது. அதில், கார்த்திகை மாதம், திங்கட்கிழமைதோறும் வரும் சோமவாரங்கள் தனிச்சிறப்பு மிக்கவை. இந்த நாட்களில் சிவாலயங்களில் சங்காபிேஷகம் நடத்தப்படுகிறது.பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுப்பகுதி சிவன் கோவில்களில், நேற்று, கார்த்திகை மாதம், இரண்டாவது சோமவாரத்தையொட்டி, சங்காபிேஷகம் நடத்தப்பட்டது. ஜோதிநகர் விசாலாட்சி அம்மன் உடனமர் ஜோதிலிங்கேஸ்வரர் கோவில் மற்றும் திப்பம்பட்டி சிவசக்தி உள்ளிட்ட கோவில்களில், சோமவாரத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.* வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவில் சன்னதியில் எழுந்தருளியுள்ள காசிவிஸ்வநாதருக்கு, கார்த்திகை மாதம் இரண்டாவது வார சோமவார சங்காபிேஷகம் நேற்று மாலை நடந்தது. பூஜையில், மாலை, 5:00 மணிக்கு பால், தயிர், மஞ்சள், இளநீர், பன்னீர், தேன், திருநீறு உள்ளிட்ட, 16 வகையான அபிேஷக பூஜை நடந்தது. தொடர்ந்து. மாலை, 6:00 மணிக்கு காசிவிஸ்வநாதருக்கு, சிவலிங்க வடிவில், 308 சங்குகளால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு யாகபூஜை நடந்தது.பூஜைக்கு பின், பக்தர்கள் புனித நீரை கையில் ஏந்தி கோவிலை மூன்று முறை வலம் வந்தனர். அத-ன்பின் சங்காபிேஷக பூஜையும், சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது.* உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில், கார்த்திகை மாதம் திங்கட்கிழமை, சோமவாரத்தை முன்னிட்டு, சங்காபிேஷக பூஜை நேற்று நடந்துது. இதற்காக, கோவில் வளாகத்தில், 108 சங்குகள் 'ஓம்' வடிவில், அமைக்கப்பட்டு, யாக சாலை பூஜை நேற்று நடந்தது. காலை, 9:30 மணிக்கு, விநாயகர் பூஜை, கலச பூஜை, சங்கு பூஜை மற்றும் ஹோம பூஜைகள் நடந்தன. காலை, 11:30 மணிக்கு, காசி விஸ்வநாத சுவாமிக்கு, 108 வலம்புரி சங்காபிேஷக பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, மகா தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.அதே போல், முத்தையா பிள்ளை லே - அவுட் சோழீஸ்வரர் கோவில், ருத்ரப்பநகர் விசாலாட்சியம்மன் உடனமர் பஞ்சமுக லிங்கேஸ்வரசுவாமி கோவில் உள்ளிட்ட சிவாலயங்களில், கார்த்திகை சோமவார சங்காபிேஷக விழா நடந்தது. - நிருபர் குழு -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை