உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மது குடிக்க பணம் தராத தாயை தாக்கிய மகன்

மது குடிக்க பணம் தராத தாயை தாக்கிய மகன்

கோவை;தெலுங்குபாளையம் முத்தையா வீதியை சேர்ந்தவர் வள்ளியம்மாள், 47. இவரது மகன், விக்னேஷ், 27. தினமும் மது குடித்து விட்டு போதையில் வீட்டுக்கு வரும் விக்னேஷ், தனது தாய் வள்ளியம்மாள் மற்றும் தங்கையை தகாத வார்த்தைகளால் திட்டுவார். கடந்த சில தினங்களுக்கு முன், மதுபோதையில் வீட்டுக்கு வந்த விக்னேஷ், வள்ளியம்மாளை தாக்கியதுடன் அவரை கீழே பிடித்து தள்ளினார். இதில் காயமடைந்த வள்ளியம்மாள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்நிலையில் வீட்டுக்கு வந்த விக்னேஷ், மது குடிக்க வள்ளியம்மாளிடம் பணம் கேட்டார். பணம் தர மறுக்கவே, அவரை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கினார். வள்ளியம்மாள் அளித்த புகாரின் பேரில், செல்வபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை