உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தெற்காசிய விளையாட்டு போட்டி; மாநகர பெண் போலீஸ் சாதனை

தெற்காசிய விளையாட்டு போட்டி; மாநகர பெண் போலீஸ் சாதனை

கோவை,: கோவை, கோவை மாநகர அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் (கிழக்கு) பணிபுரிபவர் ஸ்ரீலேகா.இவர் கர்நாடக மாநிலம், மங்களூரில் கடந்த, 10 முதல் 12 வரை நடந்த, தெற்காசிய நாடுகளுக்கான முதலாவது மாஸ்டர் தடகள விளையாட்டு போட்டியில், தமிழ்நாடு சார்பில் பங்கேற்றார்.10 நாடுகளை சேர்ந்த, மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். இதில், 45 வயதிற்கு மேற்பட்டோருக்கான 80 மீட்டர் தடை ஓட்டம், மும்முறை தாண்டுதல்ஆகியவற்றில்,வெள்ளி பதக்கங்களையும், 4 x 100 மீட்டர் தொடர் ஓட்டத்தில், வெண்கல பதக்கமும் வென்றார்.இவர், தான் வென்ற பதக்கங்களை, போலீஸ் கமிஷனர் சரவண சுந்தரிடம் காண்பித்தார். அவரை பாராட்டிய கமிஷனர், ரொக்கப் பரிசு வழங்கி பாராட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை