உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மார்கழி பட்டத்தில் சோளம் விதைப்பு

மார்கழி பட்டத்தில் சோளம் விதைப்பு

கிணத்துக்கடவு, ; கிணத்துக்கடவு வட்டாரத்தில், விதைப்பு செய்ய தேவையான அளவு சோளம் விதை இருப்பு உள்ளதாக வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.கிணத்துக்கடவு வட்டாரத்தில் ஆண்டுதோறும், 3 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் சோளம் சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது, விதை கிராம திட்டத்தின் வாயிலாக, கிணத்துக்கடவு வட்டாரத்தில், 'கே 12' ரக சோளம் விதை, 2 டன் அளவு இருப்பு உள்ளது.மேலும், ஒரு கிலோ சோளம் விதையின் முழு விலை, 77 ரூபாயாகும். இதில், 30 ரூபாய் மானியம் போக மீதம், 47 ரூபாய் செலுத்தி விதையை பெற்றுக்கொள்ளலாம். ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக, 30 கிலோ வரை விதைகள் வழங்கப்படும்.சோளம் விதைப்பு செய்யும் முன், விதை வாயிலாக பரவும் நோய்களை கட்டுப்படுத்த ஒரு கிலோ விதைக்கு, 10 கிராம் சூடோமோனாஸ் புளுரசென்ஸ் கலந்து விதைப்பு செய்ய வேண்டும்.விதைப்பு செய்த மூன்று நாட்களுக்குள் பயிருக்கு தேவையான கந்தகம், சுண்ணாம்பு, இரும்பு, மக்னீசியம், போரான், மாலிட்டினம், குளோரின், தாமிரம், துத்தநாகம், நிக்கல் போன்ற சத்துக்கள் அடங்கிய தானிய நுண்ணூட்டக் கலவையை, ஏக்கருக்கு 5 கிலோவை, 20 கிலோ மணலுடன் கலந்து இட வேண்டும். இவ்வாறு செய்தால் சோளத்தில் ஏற்படும் நோய் தாக்குதலை கட்டுப்படுத்தலாம். இத்தகவலை, கிணத்துக்கடவு வேளாண் உதவி இயக்குநர் அனந்தகுமார் மற்றும் துணை வேளாண் அலுவலர் மோகனசுந்தரம் ஆகியோர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை