உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / எஸ்.பி., மறுவிசாரணை; 63 மனுக்களுக்கு தீர்வு

எஸ்.பி., மறுவிசாரணை; 63 மனுக்களுக்கு தீர்வு

கோவை; பொதுமக்கள் கொடுத்த மனுக்களின் மீதான விசாரணையில் திருப்தி அடையாத மனுக்களை கண்டறிந்து, எஸ்.பி., கார்த்திகேயன் தலைமையில் மறுவிசாரணை நடத்தப்பட்டது.மனுதாரர்கள் மற்றும் எதிர் மனுதாரர்களை நேரில் வரவழைத்து, அவர்களின் மனு மீதான விசாரணையை மேற்கொண்டு, எஸ்.பி., மற்றும் போலீஸ் அதிகாரிகள் தீர்வு கண்டனர்.நேற்றுமுன்தினம் நடந்த மக்கள் குறை தீர்ப்பு முகாமில் குடும்பப் பிரச்னை, பணப்பரிமாற்ற பிரச்னை மற்றும் இடப்பிரச்னை தொடர்பான, 63 மனுக்கள் மீது மறுவிசாரணை மேற்கொண்டதில், ஒரு மனு மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய பரிந்துரைக்கப்பட்டது. 55 மனுக்கள் சுமுகமான முறையில் தீர்வு காணப்பட்டன. 7 மனுக்கள் மீது மேல் விசாரணை செய்ய பரிந்துரைக்கப்பட்டது.பிற வேலை நாட்களில், அந்தந்த டி.எஸ்.பி., அலுவலகம் மற்றும் போலீஸ் ஸ்டேஷன்களுக்கு சென்று, பொதுமக்கள் தங்கள் குறைகளுக்கு தீர்வு காணலாம் என, எஸ்.பி., அறிவுறுத்தியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ