உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தொடர் அரசு விடுமுறை நாட்களில் சிறப்பு பஸ்கள் இயக்க நடவடிக்கை

தொடர் அரசு விடுமுறை நாட்களில் சிறப்பு பஸ்கள் இயக்க நடவடிக்கை

பொள்ளாச்சி: காலாண்டு தேர்வு விடுமுறை, ஆயுத பூஜை என, தொடர் விடுமுறை வருவதால், மக்கள் சொந்த ஊர் திரும்பும் வகையில், பொள்ளாச்சியில் இருந்து, சிறப்பு பஸ்கள் இயக்கப்படவுள்ளது. பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று முதல் காலாண்டு விடுமுறை துவங்குகிறது. இடையே ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகையும் வருவதால் மக்கள் பலரும், சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்வர். குறிப்பாக, கோவையில் இருந்து, தென்மாவட்டங்களுக்கு பொள்ளாச்சி மார்க்கமாக பஸ்கள் இயக்கப்படுவதால், பழைய பஸ் ஸ்டாண்டில் வழக்கத்துக்கு மாறாக, பயணியர் கூட்டம் அலைமோதும். பயணியர் பலரும், இருக்கைகளை பிடிக்க, முண்டியடித்துக் கொண்டு பஸ்களில் ஏறுவர். இந்நிலையில், பொதுமக்கள் எந்த சிரமமும் இன்றி அவரவர் சொந்த ஊர் செல்ல, கூட்டத்திற்கு ஏற்ப சிறப்பு பஸ்களும் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசு போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறுகையில், 'பொள்ளாச்சி பணிமனைகளில் இருந்து, சிறப்பு பஸ்கள், கோவை சிங்காநல்லுார் வழியாக மதுரை, தேனி, திருநெல்வேலி உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு இயக்கப்படும். இதேபோல, உடுமலை, பழநி மார்க்கமாகவும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். பயணியர் கூட்டத்திற்கு ஏற்ப, பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை