ஆனைகட்டியில் சிறப்பு முகாம்
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம், வீரபாண்டி ஊராட்சிக்குட்பட்ட ஆனைகட்டி கே.கே. நகர் சமுதாய நலக்கூடத்தில் இன்றும், நாளையும் சிறப்பு முகாம் நடக்கிறது.இதில், பட்டா மாறுதல், ஜாதி சான்றிதழ், உழவர் கடன் அட்டை, முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு, மின் இணைப்பு, பழங்குடியினர் நலவாரிய அட்டை, குடும்ப அட்டை, மாற்றுத்திறனாளிகள் சான்றிதழ், ஆதார் கார்டு முகவரி மாற்றம் செய்தல் மற்றும் சேர்த்தல், வாரிசு சான்றிதழ் உள்ளிட்ட இ--சேவை மையம் தொடர்பான முகாம் நடக்கிறது. பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.