உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கள்ளிமடை பகுதியில் சிறப்பு துாய்மை பணி

கள்ளிமடை பகுதியில் சிறப்பு துாய்மை பணி

கோவை : கோவை மாநகராட்சி, 61வது வார்டு சிங்காநல்லுார் கள்ளிமடை பகுதியில், சிறப்பு துாய்மை பணி நடந்தது. மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் துவக்கி வைத்தார்.கிழக்கு மண்டலத்துக்கு உட்பட்ட சிங்காநல்லுார், கள்ளிமடை, கிருஷ்ணாபுரம் லே-அவுட், திருச்சி ரோடு, விநாயகர் கோவில் வீதி, ராஜா வீதி, நடு வீதி, கிழக்கு வீதிகளில் துாய்மை பணி மேற்கொள்ளப்பட்டது. டெங்கு கொசு புகை மருந்து அடிக்கப்பட்டது. மாநகராட்சி துணை கமிஷனர் சிவக்குமார், உதவி கமிஷனர் முத்துசாமி, நிர்வாக பொறியாளர் கருப்பசாமி உட்பட பலர், பணிகளைகண்காணித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை