உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நகை திருடர்களை பிடிக்க தனிப்படை

நகை திருடர்களை பிடிக்க தனிப்படை

கோவை; கோவை, வெரைட்டி ஹால் ரோடு, சாமி ஐயர் புது தெருவை சேர்ந்தவர் நிர்மல் குமார் மண்டல், 55. நகை தயாரிப்பு மற்றும் ஜூவல்லரி உரிமையாளர். இவரது கடையில், மேலாளராக பணிபுரிந்த, மேற்குவங்கத்தை சேர்ந்த மானிக்துட்டா, 29, ஊழியராக இருந்த துட்டான் துாலி, 28 ஆகியோர், ரூ.72 லட்சம் மதிப்பிலான, 708.250 கிராம் எடையுள்ள மூன்று தங்க நெக்லஸ்களை, திருடிக் கொண்டு மாயமாகினர். வெரைட்டிஹால் ரோடு போலீசார் வழக்கு பதிந்து, இருவரையும் பிடிக்க தனிப்படை அமைத்துள்ளனர். தப்பிய இருவரும் மேற்குவங்கம் சென்றிருக்கலாம் என்பதால், அங்குள்ள போலீசாரிடம் தகவல் கோரப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !