உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இன்று சிறப்பு கிராம சபை கூட்டம்

இன்று சிறப்பு கிராம சபை கூட்டம்

அன்னுார்; பழுதான வீடுகள் சீரமைப்பு திட்டத்திற்கான சிறப்பு கிராம சபை கூட்டம் இன்று நடக்கிறது. தமிழக அரசு கலைஞர் பழுதான வீடுகள் சீரமைக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. இத்திட்டத்தில் அரசு நலத்திட்டங்களில் வீடு பெற்றவர்கள் தங்கள் வீடு மிகவும் பழுதடைந்து இருந்தால், அந்த வீடுகளை அகற்றிவிட்டு புதிய வீடுகள் கட்ட இரண்டு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட உள்ளது.இதற்கான சிறப்பு கிராம சபை கூட்டம் 5-ம் தேதி நடத்த அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.இதன்படி அன்னுார் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 21 ஊராட்சிகளிலும் இன்று காலை 11:00 மணிக்கு சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் ஏற்கனவே அரசின் பல்வேறு திட்டங்களில் வீடு பெற்றவர்கள், வீடு பழுதடைந்து இருந்தால் கிராம சபையில் பங்கேற்று விண்ணப்பித்து புதிய வீட்டுக்கு நிதி பெறலாம், என அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ