உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இன்று கிராம சபை சிறப்பு கூட்டம்

இன்று கிராம சபை சிறப்பு கூட்டம்

அன்னுார்; மூக்கனுாரில் இன்று (1ம் தேதி) சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது. கடந்த 2024ம் ஆண்டு ஏப். 1 முதல் 2025ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் செய்யப்பட்ட பணிகளை, சமூக தணிக்கை செய்யும் பணி, வடக்கலூர் ஊராட்சியில் கடந்த நான்கு நாட்களாக நடைபெற்றது. வட்டார வள அலுவலர் இமானுவேல், தலைமையில் தணிக்கையாளர்கள் வீடு வீடாகச் சென்று வேலை அட்டைகளை பரிசோதித்தனர். பணிகள் களத்தில் அளவீடு செய்யப்பட்டன. நேற்று சமூக தணிக்கை அறிக்கை தயாரிக்கப்பட்டது. இன்று காலை 11:00 மணிக்கு மூக்கனுாரில், சமுதாய நலக்கூடத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி