கனிமவளம் கொள்ளை தடுக்க சிறப்பு புலனாய்வு குழு
கோவை : கோவையில் கனிமவளங்கள் கொள்ளை போவதை தடுப்பதற்காக, எஸ்.பி., தலைமையில் சிறப்பு புலனாய்வுக்குழு துவங்கப்பட்டுள்ளது. இதில் ஒரு ஏ.டி.எஸ்.பி., ஒரு டி.எஸ்.பி., ஒரு இன்ஸ்பெக்டர், இரண்டு எஸ்.ஐ.க்கள், 50 கான்ஸ்டபிள்கள் உள்ளனர். இந்த சிறப்பு புலனாய்வுக்குழு அலுவலகம், கோவை சத்தி சாலையிலுள்ள சி.பி.சி.ஐ.டி., அலுவலகத்திற்கு அருகே செயல்படுகிறது. ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவுபடி, கோவை மாவட்டத்தில், மேட்டுப்பாளையம், கோவை வடக்கு, பேரூர், கிணத்துக்கடவு, சூலுார் ஆகிய தாலுகாக்களில் கனிமவளம் கொள்ளை போவதை தடுக்க, இந்த சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் பணி மேற்கொள்வர். இந்த சிறப்பு புலனாய்வுக்குழு அலுவலகத்தை, 94870 06571 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு கனி மவளக்கொள்ளை குறித்த தகவல்களை, ஆதாரங்களோடு தெரிவிக்கலாம்.