வளர்பிறை ஏகாதசி சிறப்பு பூஜை
பொள்ளாச்சி,; பொள்ளாச்சி டி. கோட்டாம்பட்டி பெருமாள் கோவிலில், வளர்பிறை ஏகாதசியையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.பொள்ளாச்சி அருகே டி. கோட்டாம்பட்டி ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜப்பெருமாள் கோவிலில், வளர்பிறை ஏகாதசியையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.விழாவையொட்டி காலை, 10:30 மணிக்கு பால், இளநீர், தயிர், தேன், திருமஞ்சன பொடி, மஞ்சள் பொடி, சந்தனம், பன்னீர் உள்ளிட்ட அபிேஷகம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள், சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.காலை, 11:00 மணிக்கு விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.