உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கும்பாபிேஷகத்தில் பிரதிஷ்டை செய்யும் கலசங்களுக்கு சக்தி ஊட்ட சிறப்பு பூஜை

கும்பாபிேஷகத்தில் பிரதிஷ்டை செய்யும் கலசங்களுக்கு சக்தி ஊட்ட சிறப்பு பூஜை

ஆனைமலை: ஆனைமலை மாசாணியம்மன் கோவில் கும்பாபிேஷக விழாவை முன்னிட்டு, கலசங்களுக்கு ஆர்ஷ வித்யா பீடம் சார்பில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது.ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், வரும், டிச., 12ம் தேதி கும்பாபிேஷக விழா நடக்கிறது. இதற்காக, கோவிலில் உள்ள ராஜகோபுரம், மேற்கு, கிழக்கு கோபுரங்கள், கருவறை விமானங்கள், மூலவர், பரிவார மூர்த்திகளுக்கான கலசங்கள் நிறுவப்பட உள்ளது. இதற்காக, மதுரையில் இருந்து கலசங்கள் கொண்டு வரப்பட்டு, நா.மூ., சுங்கம் தனியார் திருமண மண்டபத்தில் பாதுகாப்பாக வைத்து, தயார்படுத்தும் பணிகள் நடக்கினறன.ராஜகோபுரத்துக்கு நான்கு அடியில் ஏழு கலசங்கள்; கருவறை விமானத்துக்கு மூன்று கலசங்கள்; திசை கோபுரங்களுக்கு மூன்று அடியில், 10 கலசங்கள்; பரிவார மூர்த்திகளுக்கு ஒரு அடியில், 32 கலசங்கள், என மொத்தம், 52 கலசங்கள் தயார்படுத்தும் பணிகள் நடைபெற்றன.இந்நிலையில், 52 கலசங்களுக்கு ஆர்ஷ வித்யா பீடம் சார்பில் நேற்று சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. ஆர்ஷ வித்யா பீடம் பூஜ்யஸ்ரீ ததேவாநந்த சுவாமிகள் தலைமை வகித்தார். அறங்காவலர் குழு தலைவர் முரளி கிருஷ்ணன் முன்னிலை வகித்தார். தொடர்ந்து, கலசங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.அறங்காவலர் குழு தலைவர் கூறுகையில், ''ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், கும்பாபிேஷக விழா வரும், டிச., 12ம் தேதி நடக்கிறது. மதுரையை சேர்ந்த ஸ்தபதிகள், 52 கலசங்களை தயார் செய்தனர். கும்பாபிேஷகத்தின் போது, கோபுரத்தில் நிலை நிறுத்தப்படுகின்றன,'' என்றார்.ஆர்ஷ வித்யா பீடம் தலைவர் ததேவாநந்த சுவாமிகள் கூறுகையில், ''கோவில் கும்பாபிேஷகத்தையொட்டி, கலசங்களுக்கு சக்தியை ஊட்டும் விதமாக சகஸ்ரநாம அர்ச்சனை, பாராயணம் செய்யப்பட்டுள்ளது. சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டுள்ளன,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை