உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவை - ஜெய்ப்பூர் இடையே சிறப்பு ரயில்

கோவை - ஜெய்ப்பூர் இடையே சிறப்பு ரயில்

கோவை: கோவை -ஜெய்ப்பூர் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என, ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, கோவை - ஜெய்ப்பூர்(06181) இடையேயான சிறப்பு ரயில், வரும், 7 முதல், செப்., 4 ம் தேதி வரை வியாழக்கிழமைகளில், கோவையில் இருந்து அதிகாலை 2:30 மணிக்கு புறப்பட்டு, சனிக்கிழமை மதியம் 1:25 மணிக்கு ஜெய்ப்பூர் சென்றடையும். ஜெய்ப்பூர் - கோவை(06182) இடையேயான சிறப்பு ரயில் வரும், 10 முதல், செப்., 7ம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளில், ஜெய்ப்பூரில் இருந்து இரவு 10:05 மணிக்கு புறப்பட்டு, புதன் கிழமை காலை 8:30 மணிக்கு கோவை வந்தடையும். சிறப்பு ரயில்களில் ஏ.சி., மூன்றடுக்கு, மூன்றடுக்கு எகானமி, படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, ரேணிகுண்டா, கடப்பா, நிசாமாபாத், புர்னா உள்ளிட்ட பல்வேறு ரயில்வே ஸ்டேஷன்களில் நின்று செல்லும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை