தைப்பூசத்தை முன்னிட்டு சிறப்பு ரயில் சேவை துவக்கம்
கோவை: தைப்பூசத்தை முன்னிட்டு சிறப்பு மெமு ரயில், தனது சேவையை நேற்று துவக்கியது.பிப்., 11 அன்று, தைப்பூசம் கொண்டாடப்படுகிறது. தைப்பூசத்தை முன்னிட்டு முருகக்கடவுளின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான, பழனிக்கு, கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும், பக்தர்கள் செல்வது வழக்கம். பக்தர்களின் வசதிக்காக, கோவை - திண்டுக்கல் இடையே சிறப்பு மெமு ரயில் வரும், நேற்று முதல் வரும் 14 வரை(ஞாயிறு தவிர) இயக்கப்படும் என, ரயில்வே நிர்வாகம் அறிவித்திருந்தது.இதையடுத்து, சிறப்பு ரயில் நேற்று தனது சேவையை துவங்கியது. இந்த ரயிலில், கோவையிலிருந்து குறைந்த எண்ணிக்கையிலேயே பயணிகள் பிரயாணம் செய்தனர்.