பேரிடர் மேலாண்மை குழுவுக்கு சிறப்பு பயிற்சி
கோவை; தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை குழுவுக்கு காலநிலை பாதிப்பு மதிப்பீட்டு தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சி, வேளாண் பல்கலையில் நேற்று நடந்தது.வேளாண் பல்கலை முன்னாள் துணைவேந்தர் கீதாலட்சுமி பேசுகையில், ''காலநிலை மாற்றத்தால் விவசாயம் மற்றும் பேரிடர் மேலாண்மையில் ஏற்படும், சவால்களை சமாளிக்க அறிவியல் ஆராய்ச்சிகளை, கள அளவிலான பயன்பாடுகளுடன் ஒருங்கிணைப்பது அவசியம். காலநிலை மாற்றத்தின் விளைவுகளுக்கான எதிர்ப்பு அணுகுமுறைகளை, கற்க வேண்டியது அவசியம்,'' என்றார்.முன்னதாக, மாநில வருவாய் நிர்வாகம், பேரிடர் மேலாண்மை ஆணையரக கமிஷனர் சிஜி தாமஸ் வைத்தியன், வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக பேசினார்.வேளாண் பல்கலை துணைவேந்தர்(பொறுப்பு) தமிழ்வேந்தன் தலைமை வகித்தார். வேளாண் காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் சத்தியமூர்த்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.