உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வேகத்தடைகளால் பயண நேரம் அதிகரிப்பு; வாகன ஓட்டுநர்கள் அதிருப்தி

வேகத்தடைகளால் பயண நேரம் அதிகரிப்பு; வாகன ஓட்டுநர்கள் அதிருப்தி

பொள்ளாச்சி ; பொள்ளாச்சி - பல்லடம் வழித்தடத்தில், குறுகிய துாரத்தில் அடுத்தடுத்த அமைக்கப்பட்டுள்ள சிறிய அளவிலான வேகத்தடைகளை அகற்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சி நகரில், வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தி விபத்துகளை தவிர்க்க, சாலைகளில் ஆங்காங்கே வேகத்தடைகள் அமைக்கப்படுகின்றன. குறிப்பாக, மருத்துவமனைகள், பள்ளிகள், கோவில்கள், ரயில்வே கிராசிங் என, மக்கள் அதிகம் வந்து செல்லும் நகர எல்லைக்கு உட்பட்ட சாலைகளில் மட்டுமே வேகத்தடை அமைக்கப்பட்டது. இதுதவிர, தற்போது, முக்கிய வழித்தடங்களில், சந்திப்புகள், கிராமங்களை கடந்து செல்லும் சாலைகளில் ஆங்காங்கே சிறிய அளவிலான வேகத்தடை (ரம்புள் ஸ்பீட் பிரேக்கர்) அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பாலக்காடு, மீன்கரை, திருப்பூர், உடுமலை, கோவை என, முக்கிய வழித்தடங்களில், இவ்வகை வேகத்தடைகள் அதிகளவில் அமைக்கப்பட்டுள்ளன. துவக்கத்தில், இவ்வழித்தடங்களில், வேகத்தடை அமைக்கப்பட்ட இடங்களில், வாகனங்கள் வேகத்தை குறைத்தே இயக்கப்பட்டன. ஆனால், அவ்வழித்தடத்தை கடந்து செல்வதற்கான நேரம் அதிகரித்ததால், தற்போது, வேகத்தடையைப் எந்தவொரு வாகன ஓட்டுநர்களும் பொருட்படுத்துவதில்லை. ஆனால், பொள்ளாச்சி - பல்லடம் ரோட்டில், குறுகிய துார இடைவெளியில், சிறிய அளவிலான வேகத்தடை சற்று தடிமனாக அமைக்கப்பட்டுள்ளதால், வாகன ஓட்டுநர்கள் திணறி வருகின்றனர். இது குறித்து வாகன ஓட்டுநர்கள் கூறியதாவது: பொள்ளாச்சி - பல்லடம் ரோட்டில், சிறிய அளவிலான வேகத்தடை குறுகிய துாரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கான ஸ்டட் மற்றும் பட்டையின் தடிமன் பெரிதாக அமைக்கப்பட்டுள்ளதால், ஓட்டுநர்கள், வாகனத்தின் வேகத்தை முற்றிலும் குறைத்து செல்ல வேண்டியுள்ளது. வழக்கமாக, கார் மற்றும் பைக்கில், 50 நிமிடத்தில் பல்லடத்தை சென்றடையலாம். தற்போது, ஒன்றரை மணி நேரம் வரை பயணிக்க வேண்டியுள்ளது. கர்ப்பிணிகள், முதியோர்கள், உடல்ரீதியான பாதிப்புக்கு உள்ளவர்கள் அவசர தேவைக்கு செல்லும் போது, அதிர்வுகளால் கூடுதல் பாதிப்பு ஏற்படுகிறது. மக்கள் நலனை கருத்தில் கொண்டு, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், இந்த பிரச்னையில் கவனம் செலுத்தி தீர்வு காண வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை