உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  அரசுப்பள்ளி அருகே வேகத்தடை தேவை

 அரசுப்பள்ளி அருகே வேகத்தடை தேவை

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அருகே விபத்துகளை தவிர்க்க வேகத்தடை அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. பொள்ளாச்சி அருகே, தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அருகே, கிழக்கு புறவழிச்சாலை செல்கிறது. இந்த ரோடு வாகன போக்குவரத்து நிறைந்துள்ளது. இந்நிலையில், நெடுஞ்சாலைத்துறை வாயிலாக, கிழக்கு புறவழிச்சாலையில் புதியதாக தார் ரோடு போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், தொப்பம்பட்டி பள்ளி அருகே இருந்த வேகத்தடை மூடி, தார் ரோடு அமைக்கப்பட்டுள்ளது. இதனால், விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. பொதுமக்கள் கூறியதாவது: தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அருகே, ரோட்டில் வேகத்தடை அமைக்கவில்லை. அங்கு வெள்ளை பட்டையிலான வேகத்தடை மட்டும் இருந்த நிலையில் தற்போது அதனையும் மூடி தார் சாலை அமைத்துள்ளனர். இந்த ரோட்டில் கனரக வாகனங்கள் செல்லும் நிலையில், பள்ளி மாணவர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது. எனவே, பள்ளிக்கு வடக்கு, தெற்கு புறம் என இரண்டு வேகத்தடைகள் அமைக்க வேண்டும். இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி