உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இணைப்பு சாலையில் வேகத்தடை தேவை

இணைப்பு சாலையில் வேகத்தடை தேவை

நெகமம்; செங்குட்டைபாளையம் - கக்கடவு செல்லும் சாலையில் வேகத்தடை இல்லாததால் விபத்து ஏற்படுகிறது. நெகமம், வரதனூர் ஊராட்சி, செங்குட்டைபாளையத்தில் இருந்து, கக்கடவு செல்லும் சாலையில் வாகன போக்குவரத்து அதிகம் உள்ளது. இவ்வழித்தடத்தில் அதிகளவு வளைவு பகுதி இருப்பதால், கனரக வாகனங்கள் செல்லும் போது எதிரே வரும் வாகனங்கள் கடந்து செல்ல சிரமம் ஏற்படுகிறது. இதுமட்டுமின்றி, மூட்டாம்பாளையம் செல்லும் இணைப்பு சாலையும் உள்ளதால் இப்பகுதியில் திரும்பும் வாகனங்களால் விபத்து அபாயம் உள்ளது. எனவே, வாகன ஓட்டுநர்கள் நலன் கருதி முக்கிய வளைவு பகுதி மற்றும் இணைப்பு சாலை அருகே வேகத்தடை அமைக்கவேண்டும். இருசக்கர வாகன ஓட்டுநர்கள் கூறுகையில், 'கிராம சாலைகளில் வரும் கனரக வாகனங்கள், கார் போன்றவை வேகமாக இயக்கப்படுகின்றன. இதனால், வளைவு பகுதிகள், சந்திப்புகளில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால், வேகத்தடை அமைக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை