உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / 3 ரோடுகள் சந்திப்பில் வேகத்தடை அமைக்கணும்!

3 ரோடுகள் சந்திப்பில் வேகத்தடை அமைக்கணும்!

பொள்ளாச்சி; பொள்ளாச்சி அடுத்துள்ள, மாப்பிள்ளைக்கவுண்டன்புதுாரில் மூன்று ரோடுகள் சந்திப்பு பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும், என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட, மாப்பிள்ளைக்கவுண்டன்புதுாரில், நடுப்புணி ரோடு, ராமபட்டிணம் பிரிவு ரோடு சந்திப்பு உள்ளது. மூன்று ரோடு சந்திப்பு பகுதியில் வேகத்தடை இல்லாததால், விபத்துகள் ஏற்படுகின்றன.பொதுமக்கள் கூறியதாவது: மாப்பிள்ளைக்கவுண்டன்புதுாரில் மூன்று ரோடு சந்திப்பு பகுதியையொட்டி, துவக்கப்பள்ளி, விநாயகர் கோவில் மற்றும் அங்கன்வாடி மையமும் அமைந்துள்ளது.போக்குவரத்து நிறைந்த இந்த ரோட்டில் பள்ளி மாணவர்கள், குழந்தைகள் அதிகளவில் கடந்து செல்கின்றனர். இங்கு அமைக்கப்பட்ட வேகத்தடை, ஓராண்டுக்கு முன் ரோடு புதுப்பிக்கும் போது அகற்றப்பட்டது. அதன்பின், வேகத்தடை அமைக்கவில்லை.இந்த ரோட்டில் வாகனங்கள் வேகமாக வரும் போது விபத்துகள் ஏற்படுகின்றன. இதை தவிர்க்க வாகன ஓட்டுநர்கள் முயற்சிக்கும் போது எதிர்பாராதவிதமாக கீழே விழுந்து படுகாயமடைகின்றனர்.சந்திப்பு பகுதியில் பஸ் ஸ்டாப்பும் உள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே, அதிகாரிகள் இது குறித்து ஆய்வு செய்து, வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த வேகத்தடை அமைக்க வேண்டும்.இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை