உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குளோபல் பாத்வே பள்ளியில் விளையாட்டு வளாகம் திறப்பு

குளோபல் பாத்வே பள்ளியில் விளையாட்டு வளாகம் திறப்பு

போத்தனூர்; கோவை போத்தனூர் அடுத்து செட்டிபாளையம், சமத்துவபுரம் அருகேயுள்ள குளோபல் பாத்வே பள்ளியில், பிளின் விளையாட்டு வளாகம் திறப்பு விழா, குமரகுரு கல்வி நிறுவனத்தின் தலைவர் சங்கர் வாணவராயர் தலைமையில் நடந்தது. இந்திய பெண்கள் கூடைப்பந்து அணியின், முன்னாள் கேப்டன் பத்மஸ்ரீ அனிதா பால்துரை விளையாட்டு வளாகத்தை திறந்து வைத்து பேசுகையில், பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு தன்னம்பிக்கை கொடுப்பவராகவும், ஊக்கம் அளிப்பவராகவும் இருக்க வேண்டும். அவர்களுக்கு பிடித்ததை செய்ய அனுமதியுங்கள். விளையாட்டில் ஈடுபடுவதால் தன்னம்பிக்கை, நேர மேலாண்மை, உடல் நலம் பேணுதல் உள்ளிட்ட பண்புகள் வளரும்,'' என்றார். முன்னாள் சர்வதேச கூடைப்பந்து வீரர் சுகவனேஷ்வர், பிளின் பவுண்டேஷன் அட்டர்னி டிம் ஈகின், கால்வின் போவென், சிவகுமார், குளோபல் பாத்வே பள்ளி நிர்வாக அறங்காவலர் கமலா சாஹா மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை