உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஸ்ரீ சக்தி கல்லுாரியில் விளையாட்டு தினம்

ஸ்ரீ சக்தி கல்லுாரியில் விளையாட்டு தினம்

கோவை : எல் அண்ட் டி பைபாஸ் சாலையில் அமைந்துள்ள, ஸ்ரீ சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரியில், 19வது விளையாட்டு தின விழாகொண்டாடப்பட்டது. கல்லுாரியின் தலைவர் தங்கவேலு தலைமை வகித்தார்.உலக பாடிபில்டிங் சாம்பியன் மற்றும் ஐ.சி.எப்., அதிகாரி பாஸ்கரன் மற்றும் முன்னாள் இந்திய ஹாக்கி பயிற்சியாளர் மற்றும் ஒலிம்பிக் தங்கப்பதக்கம் வென்ற வசுதேவன் ஆகியோர், சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று பேசினர்.கல்லுாரியின் முதல்வர் சக்திவேல், ஆண்டு விளையாட்டு அறிக்கையை வாசித்து, மாநில மற்றும் தேசிய அளவில் மாணவர்களின் வெற்றி சாதனைகளை கூறினார். துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் திரளாக பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை