உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஏ.ஆர்.பி., பள்ளியில் விளையாட்டு விழா 

ஏ.ஆர்.பி., பள்ளியில் விளையாட்டு விழா 

பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, ஜமீன்முத்துார் ஏ.ஆர்.பி., இன்டர்நேஷனல் பள்ளியில் ஆண்டு விளையாட்டு விழா நடந்தது. பள்ளித் தாளாளர் சுப்ரமணியம் தலைமை வகித்தார். பள்ளி இயக்குநர் அரசுபெரியசாமி வரவேற்றார்.சிறப்பு விருந்தினராக, பொள்ளாச்சி கிழக்கு போலீஸ் ஸ்டேஷன் சப்----இன்ஸ்பெக்டர் கவுதம் கலந்து கொண்டார். தொடர்ந்து, போலீசாரின் பணி, அவர்களின் வாழ்வியல் சூழல் குறித்து விளக்கிப் பேசினார்.இதையடுத்து, மாணவ, மாணவியர் இடையே பல்வேறு பிரிவுகளில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன.பள்ளிச் செயலாளர் தமிழ்செல்வன், நிர்வாகி மகேஸ்வரி ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர். பள்ளி மாணவர்கள் தலைவி அஷ்விகா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ