உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சம்ஹிதா அகாடமியில் விளையாட்டு விழா

சம்ஹிதா அகாடமியில் விளையாட்டு விழா

கோவை; மலுமிச்சம்பட்டி தி சம்ஹிதா அகாடமி பள்ளியில், நடப்பு கல்வியாண்டுக்கான விளையாட்டு விழா, பள்ளி மைதானத்தில் நடந்தது. பள்ளி முதல்வர் புஷ்பஜா தேசியக்கொடியேற்றி, விழாவை துவக்கி வைத்தார். தொடர்ந்து ஒலிம்பிக் விளக்கை ஏற்றி, மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். மாணவர்கள் வாயு, அக்னி பிருத்வி மற்றும் ஜல் என நான்கு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, விளையாட்டு போட்டி நடத்தப்பட்டது. தடை ஓட்டம், 200 மற்றும் 400 மீட்டர் தொடர் ஓட்டம், பந்து எறிதல், வண்ண பந்து சேகரிப்பு, யோகா, டேக்வாண்டோ, ஏரோபிக் நடனம் என பல்வேறு போட்டிகள் நடந்தன. விளையாட்டு போட்டிகளில், அதிக புள்ளிகள் பெற்று பிரித்வி குழு முதலிடம் பிடித்து சுழற்கோப்பையை தட்டிச் சென்றது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, பள்ளி முதல்வர் பரிசு வழங்கி கவுரவித்தார். உடற்கல்வி ஆசிரியர்கள் ஹரிதா, காந்திநாதன் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களின், பெற்றோர் விழாவில் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !