உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஸ்ரீ ஈஸ்வர் கல்லுாரி சார்பில் இல்லம் தேடி தொழில் பயிற்சி

ஸ்ரீ ஈஸ்வர் கல்லுாரி சார்பில் இல்லம் தேடி தொழில் பயிற்சி

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவில் உள்ள ஸ்ரீ ஈஸ்வர் இன்ஜினியரிங் கல்லுாரி சார்பில், கிராமப்புற பெண்களுக்கான இல்லம் தேடி தொழில் பயிற்சி, மன்றாம்பாளையத்தில் துவக்கப்பட்டது. தொழில்முனைவோர் சந்தியா தலைமை வகித்தார். ஸ்ரீ ஈஸ்வர் கல்லுாரி ஆராய்ச்சித்துறை டீன் கருப்புசாமி, தொழில்துறை நல்லுறவு டீன் கண்ணன் நரசிம்மன் கூறியதாவது: மத்திய அரசின் வழிகாட்டுதல்படி, இப்பயிற்சி அளிக்கப்படுகிறது. தேனீ, காளான் வளர்த்தல், பேக்கரி உணவு பண்டங்கள், வளையல், மெழுகுவர்த்தி, சூரிய பலகை தயாரித்தல், இரு சக்கர வாகன பழுது நீக்குதல், விவசாயத்துக்கான டிரோன் பயிற்சி, நுால் பின்னல், வீட்டு ஒயரிங், யூ.பி.எஸ். நிறுவுதல் பயிற்சிகள், மத்திய அரசின் எம்.எஸ்.எம்.இ. 3.0 திட்டத்தின் வாயிலாக அளிக்கப்படுகிறது. உற்பத்தி செய்யும் பொருட்களை டிஜிட்டல் தொழில்நுட்பம் வாயிலாக சந்தைப்படுத்துதல் மற்றும் பல்வேறு அரசு திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு, உழவர் பயன்பாடு செயலி விளக்கமும் வழங்கப்படுகிறது. பொள்ளாச்சி மற்றும் கிணத்துக்கடவு தாலுகாக்களில், 20 கிராமங்களில் இப்பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இத்திட்டத்தில் பயிற்சி பெற விரும்புவோர், 88677 03156, 97500 14614 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை