உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஸ்ரீ மத் ஆண்டவன் சுவாமிகளை சிருங்கேரி மடத்தில் தரிசிக்கலாம்

ஸ்ரீ மத் ஆண்டவன் சுவாமிகளை சிருங்கேரி மடத்தில் தரிசிக்கலாம்

கோவை:ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ மத் ஆண்டவன் சுவாமிகளை இன்று முதல் ராஜவீதி சிருங்கேரி சங்கர மடத்தில் தரிசித்து ஆசிபெறலாம்.ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ மத் ஆண்டவன் ஆசிரமத்தின் 12 வது பீடாதிபதி ஸ்ரீ வராஹமஹாதேசிக சுவாமிகள் நேற்று ராஜவீதியிலுள்ள சிருங்கேரி சங்கர மடத்திற்கு வருகை தந்தார்.அவருக்கு பக்தர்கள் பூரண கும்பம் சகிதமாக மலர்மாலைகளை அணிவித்து பூக்களை துாவி மங்கள இசைஇசைத்து சிறப்பான வரவேற்பு அளித்தனர்.ராஜவீதி சிருங்கேரி சங்கரமடத்தில் இன்று முதல் வரும் 8 ம் தேதி வரை மாலை நேரத்தில் பக்தர்களுக்கு ஆசி வழங்குகிறார்.மேலும் பிப்.,12 முதல் 22 வரை மேட்டுப்பாளையம் சாலை சாந்திமேட்டிலுள்ள ஸ்ரீமத் ஆண்டவன் ஆசிரமத்தில் சுவாமிகளை பக்தர்கள் தரிசிக்கலாம்.பக்தகோடிகள் ஆசிரம சிஷ்யர்கள், அபிமானிகள் தீர்த்த பிரசாதங்களையும் ஸ்ரீமத்ஆண்டவன் சுவாமிகளின் பரிபூரண அனுக்கிரஹத்தையும் பெறலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி