உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஸ்ரீராமர் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

ஸ்ரீராமர் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

வால்பாறை : வால்பாறை ஸ்ரீராமர் கோவில் திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.வால்பாறை அண்ணாநகர் ஸ்ரீராமர் கோவிலின், 47ம் ஆண்டு திருவிழா நேற்று காலை, 6:30 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. அதனை தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிேஷக பூஜையும், சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது.விழாவில், நாளை (12ம் தேதி) பழநி பாதயாத்திரை குழுவின் சார்பில், மாலை, 6:00 மணிக்கு பஜனை நடக்கிறது.13ம் தேதி, மாலை, 6:30 மணிக்கு ஸ்ரீகோதண்டராமசுவாமிக்கும், சீதா தேவிக்கும் திருக்கல்யாணம் நடக்கிறது. 14ம் தேதி காலை, 9:30 மணிக்கு அலங்கார தேரில் சுவாமி திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.அதன்பின், அன்னதான விழா நடக்கிறது.விழா ஏற்பாடுகளை, கோவில் தர்மகர்த்தா தர்மலிங்கம், தலைவர் தமிழ்செல்வன், பொருளாளர் சிவரஞ்சன், செயலாளர் நாகரத்தினம் உட்பட பலர் செய்துவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !