உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஸ்ரீ சாயி ஜெயந்தி விழா கொண்டாட்டம்; நாகசாயி மந்திரில் குழுமிய பக்தர்கள்

ஸ்ரீ சாயி ஜெயந்தி விழா கொண்டாட்டம்; நாகசாயி மந்திரில் குழுமிய பக்தர்கள்

கோவை; கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ நாகசாயி மந்திரில் ஸ்ரீ சாயி ஜெயந்தி விழா நேற்று விமரிசையாக கொண்டாடப்பட்டது.ஸ்ரீ சாயி ஜெயந்தி விழா கடந்த மார்ச் 30 அன்று காலை 6:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. 6:30 மணிக்கு கணபதிஹோமமும், 7:30 மணிக்கு ஸ்ரீ சாய்பாபா அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து ஏப்.,5 வரை அன்றாடம் ஸ்ரீ சாய்பாபாவுக்கு அபிஷேகமும், ஹாரத்திகளும் நடந்தது.நேற்று காலை 5:00 மணிக்கு சுவாமிக்கு காகடஹாரத்தியும், 6:00 மணிக்கு சாய்பாபா அபிஷே கமும், மாலை 6:30 க்கு ஹோமங்கள், பூர்ணாஹூதி நடந்தது. பகல் 12:00 மணிக்கு ஸ்ரீ நாகசாய்பஜன், மஹாஅன்னதானம், மாலை 4:00 மணிக்கு சிறப்பு அலங்காரம், மாலை 6:00 மணிக்கு ஸ்ரீ நாகசாய் பஜன், இரவு 8:30 மணிக்கு ஷேஜ ஹாரத்தியோடு நிறைவு பெற்றது. ஸ்ரீ சாயி ஜெயந்தி விழாவை ஒட்டி சிறப்பு மலர் அலங்காரத்தில் தங்ககவசத்தில் சுவாமி அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை