உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  ஸ்ரீ சத்ய சாய்பாபா நுாற்றாண்டு விழா

 ஸ்ரீ சத்ய சாய்பாபா நுாற்றாண்டு விழா

வால்பாறை: வால்பாறையில் பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின், நுாறாவது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. உலகம் முழுவதும் நேற்று முன்தினம் முதல் பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின், நுாறாவது பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. வால்பாறை கக்கன்காலனி சத்ய சாய் சமிதி சார்பில் பகவான் ஸ்ரீசத்ய சாய்பாபாவின், 100வது பிறந்த நாள் விழா நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி, மாலை, 6:00 மணிக்கு சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜை நடந்தது. அதன் பின், சிறப்பு பஜன், கற்பூர ஆரத்தி, பிரசாதம் வழங்கல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவில், ஸ்ரீசாய்பாபாவின் பக்தர்கள் பஜனை பாடல்களை பாடினர். தொடர்ந்து குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை, வால்பாறை சத்ய சாய் சமிதியின் கன்வீனர் சண்முகவேல், ஒருங்கிணைப்பாளர் வக்கீல் முத்துசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை