உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஸ்ரீ சத்ய சாய்பாபா 99வது ஜெயந்தி விழா

ஸ்ரீ சத்ய சாய்பாபா 99வது ஜெயந்தி விழா

வடவள்ளி; பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின், 99வது பிறந்தநாள் விழா உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ஸ்ரீ சத்ய சாய் சேவா நிறுவனங்கள், கோவை மற்றும் வடவள்ளி ஸ்ரீ சத்ய சாய் சேவா சமிதி சார்பில், பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின், 99வது பிறந்தநாள் விழா, வடவள்ளியில் உள்ள அனன்யாஸ் நானா நானி ஹோம் பேஸ் 2வில் கடந்த, 2 நாட்கள் கொண்டாடப்பட்டது.இரண்டாம் நாளான நேற்று, மாலை, விசில் விசார்த் ஐதராபாத் சிவ பிரசாத் குமார வேலு தலைமையில், வீணை கலைஞர் பாஸ்கர், ஹார்மோனியம் ஜெயக்குமார் லட்சுமணன், மிருதங்கம் சந்திரகாந்த், தபலா சிவசுப்பிரமணியம் ராமநாதன் ஆகியோர் அடங்கிய குழுவினரின், சிறப்பு விசில் இசை நிகழ்ச்சி நடந்தது.இதில், ஏராளமான தெய்வீக பாடல்களை விசில் வாயிலாக இசைத்தார். தொடர்ந்து, மங்கள ஆரத்தி மற்றும் பஜனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ