உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பவர் காட்டிய ஸ்ரீ சக்தி கல்லுாரி மூன்றாவது ஆண்டாக சாம்பியன்

பவர் காட்டிய ஸ்ரீ சக்தி கல்லுாரி மூன்றாவது ஆண்டாக சாம்பியன்

கோவை : அண்ணா பல்கலை வாலிபால் போட்டியில், ஸ்ரீ சக்தி இன்ஜி., மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி அணி தொடர் 'சாம்பியன்' பெருமையை பெற்றது.அண்ணா பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளுக்கு இடையே ஆண்களுக்கான வாலிபால் போட்டி(9வது மண்டலம்), சி.ஐ.டி., கல்லுாரியில் நடந்தது. இதில், 15 அணிகள் பங்கேற்றன.பல்வேறு சுற்றுகளையடுத்து நடந்த அரையிறுதியில், ஸ்ரீ சக்தி இன்ஜி., மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி அணி, 2-0 என்ற செட் கணக்கில், ஆர்.வி.எஸ்., கல்லுாரி அணியை வென்றது.மற்றொரு அரையிறுதியில், சி.ஐ.டி., கல்லுாரி அணி, 2-1 என்ற செட் கணக்கில் கே.பி.ஆர்., கல்லுாரி அணியை வென்றது.பரபரப்பான இறுதிப்போட்டியில், ஸ்ரீ சக்தி கல்லுாரி அணி, 2-0 என்ற செட் கணக்கில் சி.ஐ.டி., கல்லுாரி அணியை, 2-1 என்ற செட் கணக்கில் வென்று, மூன்றாவது ஆண்டாக 'சாம்பியன்ஷிப்'பட்டம் பெற்றது.இந்த வெற்றியின் வாயிலாக, ஸ்ரீ சக்தி கல்லுாரி அணி, அண்ணா பல்கலை இடைமண்டல போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.இப்போட்டி நாளையும், நாளை மறுதினமும் ஈரோட்டில் உள்ள கொங்கு பொறியியல் கல்லுாரியில் நடக்கிறது. மாநில அளவில், 19 மண்டலங்களில் வெற்றி பெற்ற அணிகள், இதில் பங்கேற்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை