உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / எஸ்.எஸ்.வி.எம்., பள்ளியில் டிஜிட்டல் விளையாட்டு விழா

எஸ்.எஸ்.வி.எம்., பள்ளியில் டிஜிட்டல் விளையாட்டு விழா

கோவை: எஸ்.எஸ்.வி.எம் ஸ்கூல் ஆப் எக்சலன்ஸ் பள்ளி வளாகத்தில் நெக்ஸ்ட் ஜென் பன் பேர் டிஜிட்டல் விளையாட்டு விழா துவக்கப்பட்டது.கோவை எஸ்.எஸ்.வி.எம் கல்வி நிறுவனம், கோவை விழாவுடன் இணைந்து, புதுமை, படைப்பாற்றல் மற்றும் பொழுதுபோக்கைத் தடையின்றி ஒன்றிணைக்கும் ஒரு நிகழ்வான நெக்ஸ்ட் ஜென் பன் பேர் என்னும் டிஜிட்டல் விளையாட்டு விழாவை நடத்துகிறது.கோவை விழாக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விளையாட்டு, கோவை சிங்காநல்லுாரில் உள்ள எஸ்.எஸ்.வி.எம் ஸ்கூல் ஆப் எக்சலன்ஸ் வளாகத்தில் நடைபெற்று வருகிறது. இதனை கோவை மாவட்ட கூடுதல் கலெக்டர் சுவேதா தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டு நேற்று துவக்கி வைத்தார்.எஸ்.எஸ்.வி.எம்., கல்வி நிறுவனங்களின் நிறுவனர் டாக்டர் மணிமேகலை மற்றும் நிர்வாக அறங்காவலர், செயலாளர் டாக்டர் மோகன்தாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் அரசுப் பள்ளிகளை சேர்ந்த, 500 மாணவர்கள் பங்கேற்றனர். நேற்று டிஜிட்டல் விளையாட்டு விழாவானது மாலை 5:00 மணி முதல் இரவு 9:00 மணி வரையிலும், இன்று மற்றும் நாளை காலை 9:00 மணி முதல் இரவு 9:00 மணி வரையிலும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை