உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அரசு ஊழியர் ஓட்டு வங்கியை இழந்து விட்டார் ஸ்டாலின்: சொல்கிறது ஆசிரியர் கூட்டமைப்பு

அரசு ஊழியர் ஓட்டு வங்கியை இழந்து விட்டார் ஸ்டாலின்: சொல்கிறது ஆசிரியர் கூட்டமைப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

உடுமலை: 'தி.மு.க., தலைவராக இருந்து, கருணாநிதி பெற்று வைத்திருந்த அரசு ஊழியர் ஓட்டு வங்கியை, மகன் ஸ்டாலின் இழந்து விட்டார்,' என, ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு அகில இந்திய செயலாளர் அண்ணாமலை தெரிவித்தார்.உடுமலையில், தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பில், பணி நிறைவு, சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு பாராட்டு உள்ளிட்ட ஐம்பெரும் விழா நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற, ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு (ஐபெட்டோ) அகில இந்திய செயலாளர் அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது:தமிழக அரசு, ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில், ஒன்றை கூட நிறைவேற்றவில்லை. பட்ஜெட்டில் சரண் விடுப்பும், 2026 முதல் நடைமுறை என அறிவித்துள்ளது, ஏமாற்றும் செயலாகும்.தி.மு.க., எதிர்க்கட்சியாக இருந்தபோதும், தேர்தல் வாக்குறுதியாகவும், பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என சத்தியபிரமாணமாக தெரிவித்தார். அகில இந்திய அளவில், ஏழு மாநிலங்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துகிறது. ஆனால், தமிழகத்தில் செயல்படுத்தாமல் சாமார்த்தியமாக பேசிவருகிறார். 6.5 லட்சம் அரசு ஊழியர்களின், 1.5 கோடி குடும்ப வாக்காளர்களை வஞ்சிக்கிறார்.கடந்த, 12 ஆண்டுகளாக ஆசிரியர்கள் நியமிக்கவில்லை; காலிப்பணியிடங்களை நிரப்பாமல், ஆட்சி முடியும் தருவாயில், 40 ஆயிரம் பேரை நியமிப்பதாக வெற்று வாக்குறுதி அளிக்கின்றனர். தி,மு.க., தலைவர் கருணாநிதி வைத்திருந்த ஓட்டு வங்கியை, மகன் ஸ்டாலின் இழந்து விட்டார்.அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்களின் ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தப்படும். ஏப்.,30க்குள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் அறிவிப்பு வெளியிட வேண்டும். இவ்வாறு, தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 47 )

நல்லதை நினைப்பேன்
மார் 23, 2025 21:34

1952 ல 17 கோடி ஜனத்தொகைக்கு 489 MPs 1989 ல 85 கோடி ஜனத்தொகைக்கு 543 MPs 2025 ல 146 கோடி ஜனத்தொகை அதே 543 MPs. தொகுதி சீரமைப்பு தேவையா இல்லையா?


senthilanandsankaran
மார் 23, 2025 19:03

நாடக ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், இவர்கள் பள்ளியிலேயே திமுகவிற்கு போட்டு போட சொல்லி மாணவர்களை திசை திருப்பும் சமூக குற்றவாளிகள். லஞ்சம் மட்டும் தான் திமுகவை ஒருங்கிணைக்கும் ஒரே புள்ளி.


sridhar
மார் 23, 2025 17:38

பத்து ருபாய் சம்பள உயர்வு என்று வரும் ஜனவரி மாதம் அறிவித்தால் மீண்டும் நன்றியோடு வால் ஆடும்.


ராஜேந்திரன்,சத்திரக்குடி
மார் 23, 2025 19:15

இந்த ஜாக்டோ ஜியோ அரசாங்க துரோகிகள் தான் திமுக ஆட்சிக்கு வருவதற்கு முழு காரணம் இந்த ...ளை திமுக அரசு அடக்குவது ஒரு வகையில் நல்லதுதான் லட்சக் கணக்கில் சம்பளம் வாங்கியும் இன்னும் வேணும் என்று போராடும் இவர்களை முச்சந்திக்கு கொண்டு வந்தால் தமிழக மக்கள் அதை ஆதரிப்பார்கள்


Mani . V
மார் 23, 2025 15:27

அதெல்லாம் ஒன்னும் இழக்கவில்லை. தேர்தல் சமயத்தில் ரெண்டு துண்டை உங்களுக்குத் போட்டால் நீங்கள் மக்களுக்கு துரோகம் செய்ய தயங்க மாட்டீர்கள்.


SP
மார் 23, 2025 14:49

மனசாட்சி என்று ஒன்று இருக்குமானால் இவர்கள் போராடவே வந்திருக்க மாட்டார்கள் ஒவ்வொரு அரசு ஊழியர்களும் ராஜ வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் அவர்கள் தன்னை விட கீழே உள்ளவர்களை நினைத்துப் பார்த்தால் இந்த போராட்டம் நடத்த மாட்டார்கள்


A.Gomathinayagam
மார் 23, 2025 14:16

ஆறரை லட்சம் ஆசிரியர்களுக்கு எப்படி ஒன்னேகால் கோடி வாக்கு வரும் .மகளிர் உரிமை ,இலவச பேருந்து திட்டம் அவர்களுக்கு நிச்சயம் கை கொடுக்கும் .ஏனனில் குறைந்தது நான்கு முனை போட்டி இருக்கும்


visu
மார் 23, 2025 14:10

வெளிப்படையாக மிரட்டுகிறார்கள் அப்படியென்றால் இவங்க பிற கட்சி ஆட்சில இருக்கும்போது எப்படி பணியில் நேர்மையாக இருந்திருப்பார்கள் .வெறும் 10 லட்சம் பேர் தங்கள் நலனுக்காக அரசை மிரட்டி பணிய வைக்க முடியும் என்றால் தனியார் ஊழியர் வணிகர்கள் விவசாயிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து தங்களுக்கு தேவையானதை பெறமுடியாதா ? ஒரு அரசு அலுவலகத்தில் லஞ்சம் எந்த அளவுக்கு என்று தெரியும் மக்கள் அமைதியாக இருக்க கூடாது


முதல் தமிழன்
மார் 23, 2025 14:06

ஏதாவது அரசு அலுவலகத்தில் உருப்படியா லஞ்சம் கொடுக்காமல் எந்த வேலையாவது பொது மக்களுக்கு செய்கிறீர்களா? ஒரு சில நல்லவர்கள் மட்டும் அரசு வேலையை நன்கு செய்கிறார்கள். அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு முதலில் பாடங்கள் முறையாக தெரியாது. ஏதோ இல்லாத குத்தம் எங்கள் கிராமத்து பிள்ளைகளுக்கு உங்கள் உதவி தேவை. முதலில் உங்களில் இருந்து ஒழுக்கம் ஆரம்பம் ஆகட்டும், பிறகு பாருங்கள், தமிழ் பிள்ளைகள் முந்திய தலைமுறைகள் போல் நன்றாக கற்று, மரியாதையாக இருப்பார்கள். நிறைய ஆசிரியர்கள் சுத்த மோசம், பாடங்கள் பற்றிய அறிவு இல்லை, பிறகு எப்படி சொல்லித்தருவார்கள். அரசு நியாயமாக, வேலை செய்யாத பணியாளர்களை உடனடியாக நீக்கிவிட்டு நன்கு படித்த இளம் பட்டதாரிகளை அமர்த்தவும். முறையாக கண்காணித்து, தவறை களைந்தால் நமக்கு விடியல். இல்லையேல் அவியல்.


Oviya Vijay
மார் 23, 2025 13:26

இங்கே பொதுவாக பலரும் கேள்வி எழுப்புவது திமுகவிற்கு தனித்து நிற்பதற்கு தைரியம் இருக்கிறதா என்று... என் பார்வையில் அவ்வாறு திமுக தனித்து நிற்குமானால் கூட கண்டிப்பாக தனிப்பெரும்பான்மை பெற்று ஜெயிக்கும். காரணம் நான் பலமுறை கூறி வருவது போல அந்த கட்சியின் உள்கட்டமைப்பு... இப்போதைக்கு தமிழகத்தில் வேறு எந்த கட்சிக்கும் இவ்வாறான ஒரு கட்டமைப்பு கிடையாது. ஜெயலலிதா இருந்தவரை அந்த கட்சிக்கும் இவ்வாறான ஒரு உள்கட்டமைப்பு இருந்தது.. அவரது மறைவிற்கு பிறகு அது கிடையாது. கருணாநிதி காலத்தில் இருந்தே கூட்டணி கட்சிகளை அரவணைத்துச் செல்வதில் திமுக என்றைக்குமே டாப் தான்... அது தற்போதும் தொடர்கிறது. வலுக்கட்டாயமாக கூட்டணிக் கட்சிகளை வெளியேற்ற வேண்டிய அவசியமும் அவர்களுக்கில்லை.. கூட்டணியில் இருக்கும் கட்சிகளும் ருசி கண்ட பூனைகள்... ஆக அவர்களும் லேசில் வெளியேற மாட்டார்கள். எதிர்க்கட்சிகள் வலுவாக இல்லாத பட்சத்தில் ஆளும் திமுகவே பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்து மத்திய சங்கி அரசாங்கத்திற்கு அதிர்ச்சியைக் கொடுக்கும்... இதில் வேடிக்கை என்னவென்றால் 2026 தேர்தலில் தவெக கட்சி பிஜேபியை விட அதிக வாக்குகள் பெற்று தமிழகத்தில் பிஜேபியை குழி தோண்டி புதைக்கப் போகிறார்கள்...


Svs Yaadum oore
மார் 23, 2025 13:53

பிஜேபிக்கு வோட்டு போட வேண்டாம்.. திராவிடனுங்களுக்கு வோட்டு போட்டு முன்னேறிய மாநிலமாக தமிழ் நாடு மாறி விட்டது ... வடக்கே ப ஜ க ஆளும் படிக்காத வடக்கன் மாநிலம்... அதே வடக்கில் காங்கிரஸ் ஆளும் வடக்கன் மாநிலத்தில் பாலும் தேனும் பெருக்கெடுத்து ஓடுது.. அதனால்தான் வடக்கன் ஹிந்திக்காரன் டெல்லி இத்தாலி வருங்கால பாரத பிரதமர் என்று விடியல் அறிவிப்பு ....


செல்வேந்திரன்,அரியலூர்
மார் 23, 2025 20:07

அப்பத்துக்கு மதம் மாறிய நீங்க திமுகவிற்கு முட்டுக் கொடுப்பது ஒன்றும் புதிது அல்ல அது ஏன் என்று கேட்டால் அதற்கு நீண்ட விளக்கவுரை அளிப்பீங்க உங்களுடைய Bore விளக்கவுரையை இங்கு யாரும் படிக்க தயாராக இல்லை எனவே அங்கியான நீங்க சங்கிகளை பற்றி எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம்.


Murthy
மார் 23, 2025 12:54

பஞ்சபடிக்கும் அகவிலைப்படிக்கும் ஓட்டை விற்கும் கூட்டம் .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை