உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / புத்த ஜெயந்தியை முன்னிட்டு தபால் தலை கண்காட்சி 

புத்த ஜெயந்தியை முன்னிட்டு தபால் தலை கண்காட்சி 

பொள்ளாச்சி; புத்த ஜெயந்தியை முன்னிட்டு, இந்திய பாரம்பரியத்தை எடுத்துரைக்கும் வகையிலும், மக்களிடையே தபால் தலை சேகரிப்பை ஊக்குவிக்கும் பொருட்டும், பொள்ளாச்சி தலைமை தபால் அலுவலகத்தில், பழமையான தபால் தலை கண்காட்சி நடந்தது.பொள்ளாச்சி தலைமை தபால் அதிகாரி சீனிவாசன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக பொள்ளாச்சி நாணயவியல் சங்க நிர்வாகி முரளி கலந்து கொண்டார். அவ்வகையில், 1947 முதல், 1985ம் ஆண்டு வரையிலான தபால் தலைகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.தொடர்ந்து, வரலாற்று பொக்கிஷமான தபால் தலைகளை சேகரிப்பது ஒரு கலையாகும். கடிதம் எழுதும் பழக்கம் தோன்றிய காலத்திலேயே, தபால் தலை சேகரிக்கும் பழக்கமும் உள்ளது. தபால் தலை சேகரிப்பு வரலாறையே உணர்த்தும் என, தெரிவிக்கப்பட்டது. துணை தபால்அலுவலர் ராஜகோபால், விற்பனை பிரதிநிதி சரவணன் மற்றும் தபால் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை