மாநில சைக்கிள் போலோ போட்டி: கோவை மாவட்டத்தில் 42 பேர் தேர்வு
கோவை: கோவை மாவட்ட சைக்கிள் போலோ விளையாட்டு கழகம் சார்பில், மாவட்ட அளவிலான சைக்கிள் போலோ போட்டி நடந்தது. கோவைப்புதுார் 'ஏ' மைதானத்தில் நடந்த போட்டியில் சப் ஜூனியர், ஜூனியர் பிரிவில் மாணவ, மாணவியர், 70 பேர் பங்கேற்றனர். தவிர, சீனியர் பிரிவில் ஏராளமான மாணவ, மாணவியர் பங்கேற்று திறமையை வெளிப்படுத்தினர். சப் ஜூனியர் மாணவியர் பிரிவில், அனுஷாஸ்த்திகா, சனிகா, சிவதர்ஷினி, நித்ய ஸ்ரீ, ஸ்வஸ்திகா, நட்சத்திரா, பிர்தி பாஸ்டீனா, பன்னீர் செல்வி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். ஜூனியர் பிரிவில், வர்ஷிகா, அக்ஷயா, சந்தோஷ் பிரியா, நெஷிகா, ஜீவிகா, தன்யா ஸ்ரீ, ஆம்னா, லக் ஷனா ஸ்ரீ ஆகியோரும், சீனியர் மாணவியர் பிரிவில், அமிர்தா பிரியா, ரூபா, மோகனா, கலை காவியா, ஹெப்சிபாடோர்தி, அபிகாயில் எஸ்பர் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர். சப் ஜூனியர் மாணவர் பிரிவில், கவின், கிஷோர் பிரபு, ஆமன் அப்ரன், கர்னவீரா, கவிஷ், மவுனிஷ், சர்வின், ஹரி பிரசாத் ஆகியோரும், ஜூனியர் பிரிவில் டிவைன் ஜோஷ்வா, குபேந்திரன், தியானேஷ், தேவதர்ஷன், கவிநந்தன், மோசிக விஜயன், நித்தீஷ்வர், முகமது அனுாப் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர். சீனியர் மாணவர் பிரிவில், நிர்மல் குமார், ரமேஷ்குமார், கதிர், ஷெர்னித் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள், 42 பேரும் வரும், 22, 23ம் தேதிகளில் ராணிப்பேட்டையில் நடக்கும் மாநில அளவிலான போட்டிக்கு தகுதிபெற்றுள்ளதாக, கழகத்தின் இணை செயலாளர் ரூபா தெரிவித்துள்ளார்.