மாநில சைக்கிளிங் போட்டி: காரமடை மாணவி சாதனை
மேட்டுப்பாளையம்: கரூரில் நடந்த மாநில சைக்கிளிங் போட்டியில், காரமடை எஸ்.ஆர்.எஸ்.ஐ., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி முதலிடம் பெற்றார். பள்ளி கல்வித்துறை சார்பில், மாநில அளவிலான சைக்கிள் போட்டி கரூரில் நடந்தது. 19 வயதுக்கு உட்பட்ட பிரிவில், காரமடை எஸ்.ஆர்.எஸ்.ஐ., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி சாதனாஸ்ரீ முதலிடம் பெற்றார். 17 வயதுக்கு உட்பட்ட பிரிவில், நவீனா இரண்டாம் இடம் பெற்றார். 14 வயதுக்கு உட்பட்ட பிரிவில், தீக்க்ஷிகா நான்காம் இடம் பெற்றார். இவர்களை, பள்ளியின் தாளாளர் கோபாலகிருஷ்ணன், செயலாளர் ஜெயகண்ணன், முதல்வர் சரஸ்வதி, ஒருங்கிணைப்பாளர் மூர்த்தி உட்பட பலர் பாராட்டினர்.