| ADDED : டிச 01, 2025 01:44 AM
பொள்ளாச்சி: பொள்ளாச்சி விஸ்வதீப்தி பள்ளியில், மாநில அளவிலான எறிபந்து போட்டி நடந்தது. பொள்ளாச்சி விஸ்வதீப்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின், 50வது பொன்விழா ஆண்டையொட்டி, மாநில அளவிலான மாணவியருக்கான எறிபந்து போட்டிகள், பள்ளி வளாகத்தில் நடந்தது. பள்ளி தாளாளர் அருட்தந்தை ஆண்டனி தலைமை வகித்தார். போட்டியை பள்ளி முதல்வர் அருட்தந்தை ஜாய் மற்றும் ரத்தினம் நினைவு அறக்கட்டளை நிறுவனர் மூகாம்பிகை துவக்கி வைத்தனர். போட்டியில், கிருஷ்ணகிரி செயின்ட்ஆன்ஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி முதலிடத்தையும், கோவை பிரசன்டேஷன் கான்வென்ட் மெட்ரிக் பள்ளி இரண்டாமிடமும், விஸ்வதீப்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மூன்றாமிடமும் பெற்றன. கிருஷ்ணகிரி செயின்ட் ஆன்ஸ் மெட்ரிக் பள்ளி நான்காமிடமும் பெற்றன. வெற்றி பெற்ற அணிகளுக்கு ரத்தினம் நினைவு அறக்கட்டளை நிறுவனர், டபுள் கார்ஸ் மேலாளர் மகேஷ் சந்திரசேகர், முன்னாள் மாணவர் பாலாஜி ஆகியோர் பரிசுகளை வழங்கினர். பள்ளி பொருளார் அருட்தந்தை நிமீஸ், பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் விஜய், சவுமியா ஆகியோர் பங்கேற்றனர்.